Today Rasi Palan, இன்றைய ராசி பலன் (17 மார்ச் 2023) – check daily astrology 17 march 2023 horoscope today prediction rasi love and romance increase

Ad - Web Hosting from SiteGround - Crafted for easy site management. Click to learn more.
இன்று, மார்ச் 17 வெள்ளிக்கிழமை, சந்திரன் நாள் முழுவதும் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று சந்திரன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதால் நாள் முழுவதும் அனுகூல பலன் கிடைக்கும். தனுசு, மகரத்திற்கு சாதகமான, லாபம் கிடைக்கும். 12 ராசியினருக்கு இன்று எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை ஜோதிட நிபுணர் ஜி.ஸ்ரீனிவாசன் M.A.(Astrology) cell: 94999 02400 விரிவாக விளக்கியுள்ளார்.

மேஷம் இன்றைய ராசி பலன் – Aries

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். கடின உழைப்பால் வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று உங்களின் நிதி நிலை முன்பை விட சற்று பலவீனமாக இருக்கும். குழந்தை தொடர்பாக கவனமாக இருக்கவும்.

மேஷம் இன்றைய நட்சத்திர பலன்
அசுவனி:
முக்கிய விஷயங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி: போட்டிகள் குறையும். உறவினர்கள் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
கார்த்திகை (பாதம் 1) : உங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கையுன் செயல்படுவது நன்மை தரும்.

பங்குனி மாதத்தில் தொழிலில் சாதிக்க உள்ள 5 ராசிகள்

ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். மிகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உள்ள சக ஊழியர்கள் உங்களை சிறிது கருத்து வேறுபாடு ஏற்படலாம். கவனமாக இருக்கவும்.

ரிஷபம் இன்றைய நட்சத்திர பலன்
கார்த்திகை (பாதம் 2,3,4) :
உங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கையுன் செயல்படுவது நன்மை தரும்.
ரோகிணி: வானங்களை ஓட்டி செல்லும் போதும், பயணங்களின் போதும் கவனம் தேவை.
மிருகசீரிஷம் (பாதம் 1,2) :தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரலாம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கான பங்குனி மாத நட்சத்திர பலன்

மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக செயல்படவும். காலை முதல் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டுச் செயல்படவும். மனைவியின் உடல்நிலையில் கவலை ஏற்படலாம். நீங்கள் நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம் இன்றைய நட்சத்திர பலன்
மிருகசீரிஷம் (பாதம் 3,4) :
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரலாம்.
திருவாதிரை: பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் இருக்க கூடும். அதே நேரத்தில் நல்ல பலனும் கிடைக்க கூடும்.
புனர்பூசம் (பாதம் 1,2, 3) : அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதன் மூலம் அந்தஸ்து அல்லது கௌரவ பங்கம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

பங்குனி மாதம் 2023 : 12 ஆண்டுகளுக்கு பின் சேரும் குரு, சூரியன், புதன் கவனம் தேவைப்படும் ராசிகள

கடகம் இன்றைய ராசி பலன் – Cancer

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இன்று நல்ல சொத்து வாங்குதல் சார்ந்த செலவும் கூடும். குழந்தை மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த சில வேலைகளை செய்து வெற்றி பெறுவீர்கள்.

கடகம் இன்றைய நட்சத்திர பலன்
புனர்பூசம் (பாதம் 4) :
அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதன் மூலம் அந்தஸ்து அல்லது கௌரவ பங்கம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
பூசம்: எதிர்ப்புகள் விலகும். பல்வேறு பிரச்சனைகளை கொடுத்த எதிரிகள் பணிந்து செல்லும் நிலை உருவாகும்,
ஆயில்யம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும்.

பங்குனி மாத ராசி பலன் : குரு, சூரியன் சேர்க்கையால் தொழில் வெற்றி, திருமணம் என பிரகாசிக்க உள்ள 6 ராசிகள்

சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo

சிம்ம ராசியினருக்கு இன்று அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் பிள்ளைகளின் கல்வி குறித்து கவலையடைவார்கள்.

சிம்மம் இன்றைய நட்சத்திர பலன்
மகம்:
பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
பூரம்: உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகளும் கிடைக்க கூடும். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும்.
உத்திரம் (பாதம் 1): பேச்சு சாதூரியத்தால் காரிய வெற்றி உண்டாகும். வருமானம் திருப்தி தரும் விதத்தில் இருக்கும்.

மீனத்தில் நீச பங்க ராஜ யோகம் அடையும் புதன் : 5 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான்!

கன்னி இன்றைய ராசி பலன் – Virgo

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் தேவையான உதவிகள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவைப் பெறலாம். உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

கன்னி இன்றைய நட்சத்திர பலன்
உத்திரம் (பாதம் 2,3,4)
:பேச்சு சாதூரியத்தால் காரிய வெற்றி உண்டாகும். வருமானம் திருப்தி தரும் விதத்தில் இருக்கும்.
அஸ்தம் : தொழில் வியாபாரத்தில் நிதி நிலை சீரடையும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும்.
சித்திரை (பாதம் 1,2) : எல்லா காரியங்களிலும் அனுகூலமான பலன் கிடைக்கும். நன்மைகள் அதிகரிக்கும்.

பங்குனி மாத நட்சத்திர பலன் : சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்கான பங்குனி மாத நட்சத்திர பலன்

துலாம் இன்றைய ராசி பலன் – Libra

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். இன்று வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைத்து பொருளாதார நிலை வலுவடையும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

துலாம் இன்றைய நட்சத்திர பலன்
சித்திரை (பாதம் 3,4) :
எல்லா காரியங்களிலும் அனுகூலமான பலன் கிடைக்கும். நன்மைகள் அதிகரிக்கும்.
சுவாதி: வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்க கூடும். பணியில் இருந்த தொய்வு நீங்கும்.
விசாகம் (பாதம் 1,2,3) : திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க கூடும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

ராகு மகா தசை எத்தனை வரும்? இதில் நல்ல பலன் கிடைக்குமா? கெடுதல் உண்டாகுமா – எளிய பரிகாரம் இதோ

விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் மனதளவில் திருப்தி அடைவீர்கள். உங்கள் அனுபவத்தாலும், திறமையாலும் தடைப்பட்ட வேலைகள் வெற்றி கிடைக்கும். நீங்கள் ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவீர்கள்,

விருச்சிகம் இன்றைய நட்சத்திர பலன்
விசாகம் (பாதம் 4) :
திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க கூடும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
அனுஷம்: தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் திருப்தி தரக்கூடும். நோய் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.
கேட்டை: நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்த நபர்களை சந்திக்க நேரலாம். அவர்களால் உதவியும் கிடைக்க கூடும்.

பகை ஸ்தானத்தில் செவ்வாய் : 5 ராசியினர் மோசமான பலன்களை தவிர்க்க செய்ய வேண்டியவை

தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுப கிரகங்களின் சேர்க்கையால் பண வரவு கிடைக்கும். தடைபட்ட உங்களின் பல பணிகள் இன்று செய்து முடிக்க சூழல் சாதகமாக இருக்கும். இன்று குடும்ப வாழ்க்கையில் இனிமையான நாளாக இருக்கும். சில எதிர்கால திட்டங்களையும் இன்று விவாதிப்பீர்கள். நீங்கள் முன்னெடுக்கும் வேலையில் அதிக லாபம் கிடைக்கும்.

தனுசு இன்றைய நட்சத்திர பலன்
மூலம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரவேண்டிய பணம் கிடைக்கலாம். மனம் மகிழக்கூடிய நல் செயதிகளும் வரக்கூடும்.
பூராடம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகனம் மூலம் யோகம் உண்டாகும்.
உத்திராடம் (பாதம் 1) : மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து திருப்தியான நிலை காணப்படும். பண வரவு உண்டாகும்.

மிகவும் அக்கறையுள்ள ராசிகள்… இவர்களால் உணர்ச்சிகளை மறைக்க முடியாது!

மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn

மகர ராசிக்காரர்கள் இன்று மிகவும் பிஸியான நாளாக இருக்கும். மனதில் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்தினால் நல்ல மேன்மை உண்டாகும். . வேலையை நன்றாகத் திட்டமிட்டுச் செய்யவும்.

மகரம் இன்றைய நட்சத்திர பலன்

உத்திராடம் (பாதம் 2,3,4) :மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து திருப்தியான நிலை காணப்படும். பண வரவு உண்டாகும்.

திருவோணம்: தொழில் வியாபாரம் சிறப்படையும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரலாம்.

அவிட்டம் (பாதம் 1,2) : ஆடை, ஆபரணங்கள் வாங்கும் நிலை உண்டாகும். சாதூரிமான பேச்சினால் காரிய அனுகூலம் ஏற்படும்.

பங்குனி மாத ராசி பலன் 2023 : தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கான பங்குனி நட்சத்திர பலன்

கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் பெற வாய்ப்புள்ளது. இன்று உங்களின் புகழ் கூடும். இன்று உங்கள் வேலையில் வெற்றி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் வாழ்க்கையில் இனிமையானதாக இருக்கும்.

கும்பம் இன்றைய நட்சத்திர பலன்
அவிட்டம் (பாதம் 3,4) :
ஆடை, ஆபரணங்கள் வாங்கும் நிலை உண்டாகும். சாதூரிமான பேச்சினால் காரிய அனுகூலம் ஏற்படும்.
சதயம்: : பணவரத்தில் மெத்தன போக்கு காணப்படும். சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் வேலை சுமை இருக்க கூடும்.
பூரட்டாதி (பாதம் 1,2,3): எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கவனம் தேவை.

கொஞ்சம் கூட பொறுப்பில்லாத ராசிகள் : பணத்தை நிர்வகிக்கத் தெரியாத மோசமான ராசிகள்

மீனம் இன்றைய ராசி பலன் – Pisces

மீன ராசியினருக்கு இன்று மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். இன்று உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம் இன்றைய நட்சத்திர பலன்
பூரட்டாதி (பாதம் 4) :
எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கவனம் தேவை.
உத்திரட்டாதி: கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. நிதானமாக போசுவது நன்மை தரும்.
ரேவதி: மனதில் துணிச்சல் உண்டாகும். கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.

ஜோதிட நிபுணர் ஜி.ஸ்ரீனிவாசன் M.A.(Astrology). சென்னை. cell: 94999 02400

Ad - WooCommerce hosting from SiteGround - The best home for your online store. Click to learn more.

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *