ms dhoni, CSK: ‘இதே மாதிரி நடந்தா’…தோனியின் கேப்டன் பதவி காலி: ஐபிஎல் விதிமுறை இதுதான்…அந்த 2 பேரால் பிரச்சினை! – csk vs lsg it is going to be my second warning after which i will probably be off says ms dhoni

Ad - Web Hosting from SiteGround - Crafted for easy site management. Click to learn more.

ஐபிஎல் 16ஆவது சீசனின் 6ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 57 (31), டிவோன் கான்வே 47 (29) ஆகியோர் அதிரடியாக விளையாடி அசத்தினார்கள். அடுத்து ஷிவம் துபே 27 (16), அம்பத்தி ராயுடு 27 (14), மகேந்திரசிங் தோனி 12 (3) ஆகியோர் கடைசி நேரத்தில் அதிரடி காட்டியதால், சிஎஸ்கே 20 ஓவர்களில் 217/7 ரன்களை குவித்து அசத்தியது.

லக்னோ இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஓபனர்கள் கே.எல்.ராகுல் 20 (18), கைல் மேய்ர்ஸ் 53 (22) இருவரும் இணைத்து அதிரடியாக ஆட்டத்தை துவங்கினார்கள்.

இருப்பினும், அடுத்து தீபக் ஹூடா 2 (6), க்ருனால் பாண்டியா 9 (9) ஆகியோர் படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஸ்டாய்னிஸ் 21 (18), நிகோலஸ் பூரன் 32 (18), ஆயுஸ் படோனி 23 (18), கிருஷ்ணப்பா கௌதம் 17 (11) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால், லக்னோ அணி 20 ஓவர்களில் 205/7 ரன்களை மட்டும் சேர்த்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தோனி பேட்டி:

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய கேப்டன் மகேந்திரசிங் தோனி, ”பிட்ச் எப்படி செயல்படும் என்பது குறித்து எனக்கு எந்த புரிதலும் இல்லாமல் இருந்தது. ரன்களை குவிக்க கஷ்டமாக இருக்கும் என்றுதான் கருதினேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. ரன்களை குவிக்க ஏதுவாக பிட்ச் இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் இன்னமும் தங்களது திறமையை மேம்படுத்த வேண்டும்”

”நோ-பால்களையும், ஒயிட்களையும் வீசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், வேறு கேப்டனுக்கு கீழ் விளையாடும் நிலை ஏற்படலாம். இது எனக்கு இரண்டாவது எச்சரிக்கை” என அதிரடியாக பேசினார்.

ஐபிஎல் விதிமுறை:

முதல் இரண்டு போட்டிகளில், ஓவர் ரேட்டில் சிஎஸ்கே பின்தங்கிதான் இருந்தது. பௌலர்கள் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால்தான், இந்த பிரச்சினை. குறிப்பாக துஷர் தேஷ்பண்டே, ராஜ்வர்தன் ஆகியோர் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால்தான், கேப்டன் தோனிக்கு இரண்டுமுறை ஓவர்ரேட் எச்சரிகை விடப்பட்டது.

மேலும் ஒருமுறை ஓவர் ரேட் எச்சரிகை விடப்படும் பட்சத்தில், ”சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் கேப்டன்ஸி செய்ய தடைவிதிக்கப்படும்” என்பது குறிப்பிடத்தக்கது.

Ad - WooCommerce hosting from SiteGround - The best home for your online store. Click to learn more.

#dhoni #CSK #இத #மதர #நடநத…தனயன #கபடன #பதவ #கல #ஐபஎல #வதமற #இததன…அநத #பரல #பரசசன #csk #lsg #warning #dhoni

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *