
IPL 2023 | ‘தோனி விளையாடுவார்’
சென்னை: நடப்பு சீசனில் தோனி விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னதாக, தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு வருவதாகவும் சிஎஸ்கே பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தோனி விளையாடுவார் என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். நடப்பு சீசனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் தற்போது 5-வது இடத்தில் சென்னை அணி உள்ளது.
“தோனிக்கு முழங்காலில் காயம் இருப்பது நிஜம்தான். ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடுவார்” என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சஹார் குறித்தும் அவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
“ஸ்டோக்ஸ் நன்றாக தேறி வருகிறார். வரும் 30-ம் தேதி நடைபெறும் போட்டிக்கு அவர் உடற்தகுதியுடன் தயாராக இருப்பார். அது முன்கூட்டியே கூட நடக்கலாம். அதே போல தீபக் சஹார் மே மாதத்தின் முதல் வாரத்தில் களத்திற்கு திரும்புவார்” என அவர் தெரிவித்துள்ளார்.
No Comments