Dogecoin-ஐ தூக்கிபிடிக்கும் எலான் மஸ்க்.. ட்விட்டர் லோகோ மாற்றியதால் டோஜ்காயின் 24% உயர்வு..! | Elon Musk change twitter brand into Dogecoin brand as promised to WsbChairman twitter person

Ad - Web Hosting from SiteGround - Crafted for easy site management. Click to learn more.

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கும் முடிவை எடுக்கும் முன் டிவிட்டர் தளத்தில் மக்கள் சுதந்திரமாக பேசவும், கருத்துக்களை பதிவிடவும் முடியவில்லை என்ற குற்றச்சாட்டை பதிவு செய்து, இதே டிவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் புதிய சமுக வலைத்தளம் வேண்டுமா என பதிவிட்டார்.

டோஜ்காயின் லோகோ

இதற்கு wsbchairman என்ற டிவிட்டர் கணக்கின் உரிமையாளர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து டிவிட்டரை வாங்கிவிட்டு அதன் லோகோ- வை டோஜ்காயின் ஆக மாறிவிடுங்க என டிவிட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே இது மட்டும் நடந்தால் அதிரடியாக இருக்கும் என எலான் மஸ்க் பதில் அளித்தார்.

வாக்குறுதியை

கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பின்பு இதை செய்து காட்டியுள்ளார் எலான் மஸ்க். இதுமட்டும் அல்லாமல் லோகோ-வை மாற்றிவிட்டு பழைய டிவிட்டை தேடி பிடித்து கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.

துளசி வாசம் மாறும், தவசி வாக்கு மாறமாட்டான் என்பது போல் சொன்னதை செய்துள்ளார் எலான் மஸ்க்.

டிவிட்டர் இணையதள பக்கம்

எலான் மஸ்க் டிவிட்டர் செயலின் இணையதள பக்கத்தின் லோகோ-வை டோஜ்காயின் லோகோ-வாக மாற்றியுள்ளார். பொதுவாக ஒரு நிறுவனத்தின் லோகோ என்பது அதன் அடையாளம், அப்படியிருக்கும் போது எலான் மஸ்க் செய்தது கார்பரேட் நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலி

மேலும் இந்த லோகோ மாற்றம், டிவிட்டர் இணைய பக்கத்தில் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலியில் மாற்றப்படவில்லை. இதனால் இது தற்காலிகமான மாற்றமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dogecoin விலை

டிவிட்டர் லோகோ மாற்றப்பட்டதால் Doge coin கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் அதிகப்படியாக 30 சதவீதம் வரையில் உயர்ந்தது. இது டோஜ்காயின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறினாலும் பலரும் டோஜ்காயின்-ஐ விற்பனை செய்துவிட்டு வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய CEO

எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன்பாக டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ தேடி வரும் பயணத்தில் இருந்த போது பிப்ரவரி 15 ஆம் தேதி ஷிபா இனு நாயின் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இவர் தான் புதிய CEO என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் எலான் மஸ்க்.

பார்க் அகர்வால்

இது மட்டும் அல்லாமல் டிவிட்டர் நிறுவன சிஇஓ-வாக முன்பு இருந்த பார்க் அகர்வால்-ஐ குத்திக்காட்டும் வகையில், ஷிபா இனு நாய் மற்ற நபர்களை விட மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க்.

Ad - WooCommerce hosting from SiteGround - The best home for your online store. Click to learn more.

#Dogecoinஐ #தககபடககம #எலன #மஸக. #டவடடர #லக #மறறயதல #டஜகயன #உயரவ. #Elon #Musk #change #twitter #brand #Dogecoin #brand #promised #WsbChairman #twitter #person

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *