
மரணம் என்பது, புதிய வாழ்விற்கான துவக்கத்தின் பாதை
நம் நம்பிக்கை என்பது இயேசு என்ற பெயரைக் கொண்டுள்ளது. அவர் உயிருடன் உள்ளார். தீமை தன் வல்லமையை அவர் மீது கொண்டிருக்கவில்லை.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
புதிய வாழ்விற்கான துவக்கத்தின் பாதையாக மரணம் உள்ளது என, ஏப்ரல் 18, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் உயிர்ப்பு விழாவை மையமாகக் கொண்டு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் நம்பிக்கை என்பது இயேசு என்ற பெயரைக் கொண்டுள்ளது. அவர் உயிருடன் உள்ளார். தீமை தன் வல்லமையை அவர் மீது கொண்டிருக்கவில்லை. நாம் மீண்டும் துவங்குவதிலிருந்து தோல்விகள் நம்மை தடுப்பதில்லை. மற்றும், மரணம் என்பது, புதிய வாழ்விற்கான துவக்கத்தின் பாதையாக மாறுகிறது, என உரைக்கிறது திருத்தந்தையின் செவ்வாய் டுவிட்டர் செய்தி.
திருத்தந்தையர்களின் டுவிட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள 4637வது டுவிட்டர் செய்தியாகும் இது. இந்த ஆங்கிலப் பக்கத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 53 இலட்சமாக உள்ளது.
No Comments