இறைத்தந்தையின் இரக்கத்திற்காக செபிப்போம் – திருத்தந்தை

Ad - Web Hosting from SiteGround - Crafted for easy site management. Click to learn more.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இறைத்தந்தையின் இரக்கத்திற்காக செபிப்போம் – திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

போரினால் எப்போதும் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வுலகத்தில் கடவுளிடமிருந்து நாம் விலகி இருக்கின்றோம் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தியினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 15 சனிக்கிழமை ஹேஸ்டாக் ஒன்றிணைந்து பயணிப்போம், மற்றும் இறை இரக்கம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தையின் அமைதி நமக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சூழலில் உலகம் போரினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடவுளிடமிருந்து விலகி இருக்கும் நமக்கு இறைத்தந்தையின் அமைதி அதிகமாகத் தேவைப்படுகின்றது. எனவே ஒன்றிணைந்து இறைத்தந்தையின் இரக்கத்திற்காக செபிப்போம் என்றும் வலியுறுத்தி அக்குறுஞ்செய்தியைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Ad - WooCommerce hosting from SiteGround - The best home for your online store. Click to learn more.

#இறததநதயன #இரககததறகக #சபபபம #தரததநத

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *