
அதிமுக பொதுச் செயலாளர் பதவி.. ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது | Chennai HC to listen to AIADMKs July 11 Normal Council resolutions right this moment
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் இறுதி விசாரணையை தொடங்கியது.
கடந்த ஆண்டு ஜூலை 11 இல் நடந்த அதிமுகவின் பொதுக் குழு தீர்மானங்கள் மற்றும் அண்மையில் நடந்த அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் அணி தரப்பில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தனி நீதிபதி தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்தார். இதை எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஓபிஎஸ் அணியின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது அதிமுகவில் தற்போது எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 16 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு மீதும் விவாதம் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி மணிசங்கர், வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆகியோர் ஈரோடு இடைத்தேர்தலின் போது எங்களுடன் கலந்து பேசுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எடப்பாடி அணி அப்படி நடந்து கொள்ளவில்லை. அதே போல் செயற்குழு கூட்டத்திற்கும் அழைப்பு அனுப்பவில்லை என தெரிவித்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேறு கர்நாடகா தேர்தல் வேறு என்றார். அதிமுக சார்பாக விஜய் நாராயணன் வாதம் செய்த போது ஓபிஎஸ்ஸுக்கு 4 பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆனால் எடப்பாடிக்கு 2500-க்கும் அதிகமான பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது என வாதிட்டார்.
இதையடுத்து அனைத்து அப்பீல் மனுக்களும் ஏப்ரல் 20, 21 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி இந்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் நடந்தது. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 2022 ஜூலை 11 பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஏதும் அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில், கட்சியில் இருந்து நீக்கும் போது கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்பதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் நடவடிக்கை எடுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக எப்படி கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
திமுகவுடன் இணக்கமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் இந்த இரு கட்சி தலைவர்களும் சந்தித்துக் கொள்ளும் போது பேசிக்கொள்வது என்பதே கிடையாது என விளக்கமளித்தார். பொதுக் குழு கூட்டம் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் என்பது திடீரென ஏற்பட்டது எனவும், சம்பவம் நடந்த போது அங்கிருந்தவர்கள் எம்.எல்.ஏ.க்கள், இ பி எஸ் தரப்பினர் தான் எனவும் குறிப்பிட்டார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போட்டியிட தகுதியுள்ள தன்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டு தேர்தலை நடத்தியுள்ளதாகவும், கட்சியில் பன்னீர்செல்வம் நீடிப்பது கட்சியுன் நலனுக்கு விரோதமானது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எப்படி கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். போட்டியிட விரும்பிய தேர்தலில் தன்னை ஒதுக்கி வைத்து விட்டு, இபிஎஸ் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டதாக பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
கட்சியில் இருந்து நீக்கியதால் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாமல் ஈடுசெய்ய முடியாத இழப்பை எதிர் கொண்டுள்ளார் பன்னீர்செல்வம் என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவது, எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக வாதங்களை முன் வைத்தார்.
தனி நீதிபதி, கட்சியின் நிறுவனரின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளார் எனவும், பொதுக்குழுவில் பெரும்பான்மை இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்படுகிறது. ஆனால் அதன் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது என்பதே கட்சி நிறுவனரின் நோக்கம் எனவும் வாதிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்து, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நிபந்தனைகள் விதித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தன்னிச்சையானவை, சட்டவிரோதமானவை எனவும் வாதிட்டார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது குறித்து நீதிமன்றம் இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக கூறுவதன் மூலம், அடிப்படை உறுப்பினர்களின் தீர்ப்பை மீறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
2021 டிசம்பரில் இருந்து இரட்டை தலைமை அமலில் இருந்த நிலையில் ஜூன் 23ம் தேதி திடீரென ஒற்றை தலைமை குறித்து பேசப்பட்டது எனவும், ஒற்றை தலைமை குறித்து கட்சியினர் மத்தியில் எந்த கருத்துக் கணிப்பும் நடத்தப்படவில்லை எனவும் வாதிட்டார். உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என கூறிய தீர்ப்பின் அடிப்படையிலும், பொதுக்குழு பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலும் தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளது தவறு எனவும் குறிப்பிட்டார். பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் நாளை (ஏப்ரல் 21) தொடர்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி இன்றைய தினம் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது.
#அதமக #பதச #சயலளர #பதவ. #ஓபஎஸ #மலமறயடட #மன #மத #வசரண #தடஙகயத #Chennai #hear #AIADMKs #July #Normal #Council #resolutions #right this moment
No Comments